சனாதா சக்திகள் இந்த மண்ணில் வேர் ஊன்றக்கூடாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். அவர் பெரியாரின் மடியில் தவழ்ந்தவர், அண்ணாவின் மடியில் தவழ்ந்தவர்,அண்ணாவை தூக்கி கொண்டாடியவர், அதனால்தான் அவருடன் நாம் இணைந்து களமாடுகிறோம். 2026ல் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகவேண்டும் என்பதை விட, குறுக்கு வழியில் கொல்லைப்புற வழியிலே சனாதன சக்திகள் வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பங்கு உள்ளது. பாஜக போன்ற சனாதான சக்திகளை வலுப்பெறவிடக்கூடாது. அதை வீழ்த்த வேண்டிய பொறுப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உள்ளது. சனாதான சக்திகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை என்பதை சவாலாக இந்த தேர்தலை எதிர்கொள்ளப்போகிறோம்.
2026ம் ஆண்டு நம்மால் இதே போன்று ஒரு வரலாற்று சாதனை படைக்க முடியும். மதவாத அரசியலை உயர்த்தி பிடிக்கும் கும்பலை விரட்டியடிக்க முடியும். அவர்களை தோளில் சுமக்கவேண்டாம் என்றும் அதுவும் ஒரு திராவிட கட்சி என்கிற அடிப்படையில் அதிமுகவுக்கு வேண்டுகோளாக வைக்கிறோம். ஜெயலலிதா அம்மையார் கூறினார் மோடியா, இந்த லேடியா மோதி பார்ப்போம் என கூறினார். எடப்பாடி பழனிசாமி திமுகவை வீழ்த்துவது என்று, அதிமுக வாக்கு வங்கியை அழிக்கவேண்டாம. எளிதாக மாய வலையில் சிக்க மாட்டார்கள். 2026 ல் மதச்சார்பற்ற கூட்டணிக்கு தான் வெற்றியை வழங்குவார்கள். இவ்வாறு பேசினார்.
The post தமிழகத்தில் சனாதன சக்திகளுக்கு இடமில்லை; 2026 தேர்தலில் மதசார்பற்ற கூட்டணிதான் வெற்றி பெறும்: தொல்.திருமாவளவன் திட்டவட்டம் appeared first on Dinakaran.
