ஆளுநரின் செயல்பாடு தமிழ்நாட்டின் உரிமையை மதிக்காத வகையில் உள்ளது: பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி

சென்னை: ஆளுநரின் செயல்பாடு தமிழ்நாட்டின் உரிமையை மதிக்காத வகையில் உள்ளதாக பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்த நிலையில், அதிமுக ஆட்சியில் 2, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் கடந்த 13ம் தேதி அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்நிலையில் ஆளுநர் அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று தொடங்கப்பட்டது.

மேலும் 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் அதை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் ஆளுநரின் செயல்பாடு தமிழ்நாட்டின் உரிமையை மதிக்காத வகையில் உள்ளது என பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு விரோதமான ஆளுநரின் போக்கு கவலை அளிக்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு முட்டுக்கட்டை போடுகிற ஆளுநர் தேவையா?. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் முழு மனதுடன் ஒப்புதல் தர வேண்டும். தமிழ்நாட்டை மதிக்காத ஆளுநரின் போக்கு ஏற்புடையதல்ல.

The post ஆளுநரின் செயல்பாடு தமிழ்நாட்டின் உரிமையை மதிக்காத வகையில் உள்ளது: பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி appeared first on Dinakaran.

Related Stories: