தமிழ்நாடு முழுவதும் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 95.62% பேருந்துகள் இயக்கப்படுகின்றன: போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: பொது மக்கள் பாதுகாப்பாகவும். அச்சமின்றியும் பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக, முழுமையாக பேருந்துகளை இயக்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், இப்பேருந்துகள் இயக்கம் தொடர்பாக, கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் மற்றும் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு முனையம் கிளாம்பாக்கத்திலும், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முழுவதும் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 95.62% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தமுள்ள 16,950 பேருந்துகளில் 16,207 பேருந்துகள் இயங்கி வருகின்றன என்று போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

* விழுப்புரம் மண்டலத்தில் 91.29% பேருந்துகள் இயக்கம். மொத்தமுள்ள 2,825 பேருந்துகளில் 2,578 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மண்டலத்தில் 98.96% பேருந்துகள் இயக்கம். 1545 பேருந்துகளில் 1529 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரை மண்டலத்தில் 98.43% பேருந்துகள் இயக்கம். 2,166 பேருந்துகளில் 2132 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

* கோவை மண்டலத்தில் 93.60% பேருந்துகள் இயக்கம். 2390 பேருந்துகளில் 2237 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.நெல்லை மண்டலத்தில் 99.10% பேருந்துகள் இயக்கம். 1658 பேருந்துகளில் 1643 பேருந்துகள் இயக்கம். கும்பகோணம் மண்டலத்தில் 95.02% பேருந்துகள் இயக்கம். 3030 பேருந்துகளில் 2,879 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எனவே, பயணிகள் எந்தவித அச்சமின்றி, பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள
அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள். நடத்துனர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் முழுமையாக கண்காணித்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்

The post தமிழ்நாடு முழுவதும் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 95.62% பேருந்துகள் இயக்கப்படுகின்றன: போக்குவரத்துத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: