தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

 


சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, அரியலூர், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயிலும் இரவு நேரத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது. அதே போல் காலை 9 மணி வரை பனி மூட்டம் காணப்படுகிறது. தமிழகத்தில் இந்த முறை வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கத்தை விட மழைப் பொழிவு அதிகமாக இருந்தது. நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. காற்றில் ஈரப்பதம் அதிகமாகவே உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, சென்னையில் கிண்டி, முகலிவாக்கம், போரூா், ஆயிரம் வியக்கு, பாாிமுனை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மதியம் மழை வெளுத்து வாங்கியது. தொடா்ந்து பெய்த இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

The post தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: