கோயில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.தமிழ்புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பொதுமக்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதேபோல், கைலாசநாதர் கோயிலில் அதிகாலை நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

வீரவாழியம்மன் கோயிலில் நடந்த பூஜையில் பெண்கள் திரளாக கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதேபோல், வைகுண்டவாசப்பெருமாள்கோயில், பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர், கோலியனூர் வரதராஜப்பெருமாள், புத்துவாயம்மன், எல்லீஸ் சத்திரம் சாலையில் உள்ள வீரன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த கீழையூரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி வீரட்டேஸ்வரருக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆடவல்லீஸ்வரர் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆடவல்லீஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சர்வ அலங்காரத்துடன் பல்வேறு சிறப்பு பூஜைகள். யாகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செஞ்சி: செஞ்சிகோட்டை வெங்கட்ரமணர் தேவி பூதேவிக்கு சிறப்பு திருமஞ்சனம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட வெங்கட்ரமணர் தேவி பூதேவி சுவாமிகளை ஆயிரம் கால் மண்டபத்தில் ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடல் பாடினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்தது. விழாவில் ரங்க பூபதி கல்லூரி தாளாளர் பூபதி, தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து

கொண்டனர்.

The post கோயில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: