2022- 23ம் ஆண்டில் தமிழ்நாடு –புதுச்சேரி மண்டலம் சாதனை: இலக்கைவிட ரூ.3 ஆயிரம் கோடி கூடுதல் வருமான வரி வசூல்

சிவகங்கை: தமிழ்நாடு – புதுச்சேரி மண்டலம் இலக்கை விட 3,000 கோடி கூடுதல் வருமானம் வரி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக மண்டல வருமான வரி முதன்மை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன வருமான வரி அலுவலகத்தை புதுப்பித்து பைந்தமிழ் முற்றம் என பெயரிடப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

இதனை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மண்டல வருமான வரி முதன்மை ஆணையர் ரவிசந்திரன்; ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12 சதவீதம் பேர் புதியதாக வருமான வரி தாக்கல் செய்வதாக தெரிவித்தார். அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரியில் 2022-23 வருடத்தில் நிர்ணயிக்கப்பட்ட 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி வருமான வரி இலக்கை தாண்டி 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மதுரையில் மண்டல அளவிலும், காரைக்கால் கோட்டா அளவிலும் வருமான வரி வசூலில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பைந்தமிழ் முற்றம் பழங்கால புராதன கட்டிடத்தில் தொன்மையான வருமான வரித்துறை சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகும். அந்த வகையில் 1930-ம் வருடத்தின் வருமான வரி குறித்த ஓலை சுவடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

The post 2022- 23ம் ஆண்டில் தமிழ்நாடு – புதுச்சேரி மண்டலம் சாதனை: இலக்கைவிட ரூ.3 ஆயிரம் கோடி கூடுதல் வருமான வரி வசூல் appeared first on Dinakaran.

Related Stories: