தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சேதமடைந்த 1495 சாலைகள் ரூ. 5.43 கோடியில் சீரமைப்பு: ஆணையர் தகவல்

தாம்பரம்: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், பணிகளை துரிதப்படுத்திடவும், பொதுமக்களின் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் அமைத்திடவும் மாநகராட்சியின் தலைமை பொறியாளர், பொறியாளர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் என 21 பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தரமான சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்து வருகின்றனர். மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் மற்றும் அனகாபுத்தூர் பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் சேதமடைந்த சாலைகள் மற்றும் பல்லாவரம், செம்பாக்கம், பெருங்களத்தூர் மற்றும் கிழக்கு தாம்பரம் மண்டலங்களில் சேதமடைந்த சாலைகள் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும் 502 சேதமடைந்த சாலை சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, 993 சேதமடைந்த சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, 1495 சேதமடைந்த சாலைகளை ரூ. 5.43 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி ஆணையர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சேதமடைந்த 1495 சாலைகள் ரூ. 5.43 கோடியில் சீரமைப்பு: ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: