உடல் நலத்திற்கு உறுதுணையாகும்

நன்றி குங்குமம் தோழி

நுங்கு

நுங்கு மிகவும் சுவையாக இருப்பதுடன், எண்ணற்ற நன்மைகளும் நிறைந்துள்ளது. குறிப்பாக கோடையில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துகளை அதிகம் உள்ளடக்கியதாகும்.

* நுங்கு வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் அரு மருந்தாகும்.
* வெயில் காலத்தில் உண்டாகும் அம்மை நோய்களை தடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி உடலை சுறுசுறுப்பாக்கும் ஆற்றலுடையது நுங்கு.
* உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் நுங்கினை சாப்பிட தாகம் தணியும்.
* பனை நுங்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் தன்மையுடையது.

* நுங்கிலுள்ள அந்த்யூசைன் எனும் ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்று நோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும் சக்தியுடையது.
* கர்ப்பிணிப் பெண்கள் நுங்கு சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும். மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.
* பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு நீரைத் தொடர்ந்து பருகிவர, கோடையில் ஏற்படும் வியர்க்குரு நீங்கும்.
* கோடையில் வெயில் கொப்புளம் வராமல் தடுக்க நுங்கை கட்டாயமாகச் சாப்பிட வேண்டும்.
* நுங்கை கோடைக் காலத்தில் அதிகம் சாப்பிட்டு வந்தால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் உண்டாகும் மயக்கம் தடுக்கப்படும். பனை நுங்கிலுள்ள நீர் பசியைத் தூண்டுவதுடன், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கிற்கும் மருந்தாகும்.
* நுங்கு குடல் புண்ணை ஆற்றும் வல்லமை மிக்கது.

– அபர்ணா சுப்ரமணியம், சென்னை.

The post உடல் நலத்திற்கு உறுதுணையாகும் appeared first on Dinakaran.

Related Stories: