இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கஸ்பா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “தரை தளத்தில் உள்ள பாதுகாவலர் அறைக்கு என்னை இழுத்து சென்று இரவு 7.30 மணி முதல் 10.00 மணி வரை அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். நான் பலாத்காரம் செய்யப்படுவதை 3 பேரும் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்து கொண்டு, இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் அதை இணையதளத்தில் வௌியிட்டு விடுவோம் என மிரட்டினர்” என குற்றம்சாட்டி உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கல்லூரியில் தற்போது படிக்கும் மூத்த மாணவர்களான ஜயிப் அகமது(19), பிரமித் முகர்ஜி(20) மற்றும் சட்ட கல்லூரி முன்னாள் மாணவர் மனோஜித் மிஸ்ரா ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, “3 பேரிடம் இருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் பதிவான காட்சிகள் வேறு யாருக்கும் அனுப்பப்பட்டதா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.
இதுகுறித்து சட்ட கல்லூரி அதிகாரிகளில் சிலர் கூறுகையில், “மனோஜித் மிஸ்ரா அலிப்பூர் காவல் நிலைய மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சட்ட கல்லூரி திரிணாமுல் காங்கிரசின் பரிஷத் பிரிவின் முன்னாள் தலைவர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பின் தெற்கு கொல்கத்தா அமைப்பின் பொது செயலாளர்” என தெரிவித்தனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட ஜயிப் அகமது, பிரமித் முகர்ஜி மற்றும் மனோஜித் மிஸ்ரா ஆகிய 3 பேரும் அலிப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
The post மேற்கு வங்க சட்ட கல்லூரியில் மாணவி பாலியல் பலாத்காரம்: 3 மாணவர்கள் கைது appeared first on Dinakaran.
