சென்னையில் இருந்து நெல்லை சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு: 9 பெட்டிகளின் கண்ணாடிகள் சேதம்

மணியாச்சி: சென்னையில் இருந்து நெல்லை சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது. அதிநவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் சென்னை – கோவை, சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் மற்றும் சென்னை டூ நெல்லை மற்றும் கோவை – பெங்களூர் என என 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லைக்கு புறப்பட்டது. இரவு 10.30 மணியளவில் வாஞ்சி மணியாச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ரெயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரெயிலின் 9 பெட்டிகள் சேதமடைந்தன. ரயிலின் ஜன்னல் கண்ணாடியில் கற்கள் வீசப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் இருந்து நெல்லை சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு: 9 பெட்டிகளின் கண்ணாடிகள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: