ஸ்டீம் முட்டை மசாலா கிரேவி

தேவையானவை:

முட்டை – 6,
வெங்காயம் – 2,
தக்காளி – 1,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
மல்லிதழை – சிறிதளவு.

வறுத்து அரைக்க:

மிளகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
பட்டை – சிறுதுண்டு,
கசகசா – 1/2 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

முட்டையை உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் நடுவே சிறிய பாத்திரத்தில் எண்ணெய் தடவி அடித்த முட்டையை ஊற்றி பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் வேகவிடவும்.  பாத்திரத்தை வெளியே எடுத்து ஆறிய பின்னர் முட்டையை தனியே எடுத்து விருப்பமான அளவில் வெட்டிக்கொள்ளவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து சிவக்கும் வரை வதக்கி தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி மிளகாய்தூள் சேர்த்து நன்றாக வதக்கி அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.பின்னர் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதித்த பின் சிறுதீயில் வைத்து எண்ணெய் பிரிந்த பின் முட்டை துண்டுகள் சேர்த்து 1 நிமிடம் வைத்திருந்து மல்லிதழை தூவி இறக்கவும்.

The post ஸ்டீம் முட்டை மசாலா கிரேவி appeared first on Dinakaran.