கோதுமை நெய் ரொட்டி

தேவையான பொருட்கள்

1/2 கப் கோதுமை
1/4 கப் சர்க்கரை
1/4 கப் நெய்
2 ஏலக்காய்.

செய்முறை

முதலில் சர்க்கரையை மட்டும் ஏலக்காயுடன் அரைத்து வைக்க வேண்டும். நெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக ஒரு நிமிடம் கிளறவும். பின்னர் அதில் அரைத்து வைத்த சர்க்கரை, கோதுமை சேர்க்க வேண்டும். அழுத்தி பிசையாமல் கொஞ்சம் மெல்ல பிசைந்து வைக்கவும். பின்னர் சிறு உருண்டைகளாக எடுத்து வைக்கவும். பின்னர் அதை கொஞ்சம் தட்டி எடுத்து வைக்கவும். ஓவென் இல்லாததால் கனமான பாத்திரத்தை அரை வெப்பநிலையில் ஐந்து நிமிடம் வைக்கவும். பின்பு அதன் மேல் ஒரு தட்டு வைத்து அதில் கொஞ்சம் நெய் தடவி எடுத்து வைக்க வேண்டும். பிறகு ஒரு மூடி போட்டு மூட வேண்டும். 18 நிமிடம் அரை வெப்பநிலையில் வைக்கவும். அவ்வளவுதான் கோதுமை நெய் ரொட்டி தயார்!

 

The post கோதுமை நெய் ரொட்டி appeared first on Dinakaran.