கலகலா

தேவையான பொருட்கள்

1 கப் கோதுமை மாவு
3/4 கப் பொடித்த சர்க்கரை
1 ஏலக்காய்
1 ஸ்பூன் நெய்
1 சிட்டிகை உப்பு
1 சிட்டிகை பலகார சோடா
தேவையான அளவு தண்ணீர்
தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை

முதலில் சர்க்கரையை ஏலக்காயுடன் சேர்த்து பொடிக்கவும். பின்னர் ஒரு கப் கோதுமை மாவுடன் பொடித்த சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும். மாவுடன் நெய், சோடா உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவுபோல பிசையவும். நன்கு கட்டியில்லாமல் பிசையவும். பிசைந்த மாவினை கனமான சப்பாத்தி போல் தேய்த்து அதில் டைமண்ட் வடிவில் வெட்டவும். வெட்டிய டைமண்ட் துண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக மிதமான சூட்டில் இருக்கிற எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பொன் நிறமாக பொரித்த கோதுமை கலகலாவை சிறிது ஆற வைத்து, இளம் சூட்டில் மொறுமொறுப்பாக சுவைக்கலாம்.

The post கலகலா appeared first on Dinakaran.