அவல் புளியோதரை

தேவையான பொருட்கள்

கெட்டி அவல் – 1 கப்,
உப்பு – தேவைக்கு,
புளிக்கரைசல் – 1/2 கப்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
துருவிய வெல்லம் – 1 டீஸ்பூன்.

தாளிக்க

நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
வரமிளகாய் – 2
பச்சை மிளகாய் – 1,
கறிவேப்பிலை – 6 இதழ்கள்,
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்.

செய்முறை

அவலை நன்றாக சுத்தம் செய்து, 10 நிமிடங்கள் ஊற வைத்து வடிகட்டி பிழிந்து அரைமணி நேரம் மூடி வைக்கவும். இடையிடையே திறந்து கைகளால் நன்றாகக் கலந்து விடவும். புளியை ஊறப் போட்டு, 2 டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்கவும். தாளிப்பு வந்தவுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையையும் போட்டுக் கிளறிகரைத்தப் புளி தண்ணீரையும், மஞ்சள் பொடி, உப்பையும் தாளிப்பில் சேர்த்து கொதிக்க விடவும். பெருங்காயத்தையும் போடவும். சுமார் 3 நிமிடம் வரை புளித்தண்ணீர் கொதித்ததும், பிழிந்து வைத்திருக்கும் அவலை தாளிப்பில் கொட்டிக் கிளறவும். கொதித்து எல்லாம் சேர்ந்து வந்ததும் ஊறிய அவலைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். அவல் புளியோதரை தயார்.

 

The post அவல் புளியோதரை appeared first on Dinakaran.