இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழ்நாடு, புதுவை மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் இலங்கை தூதரக முற்றுகை போராட்டம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யபட்டுள்ள தமிழகம், புதுச்சேரி மீனவர்களையும், சிறைபிடிக்கபட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க கோரி அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் சென்னை எழுப்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டமானது நடத்தபட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களின் மீன்பிடிக்கும் உரிமையை மறுக்கும் வகையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பழியை சுமத்தி, கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுவை காங்கிரஸ் கட்சியினர் சார்பாக குற்றசாட்டு வைக்கபட்டுள்ளது.

எனவே, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதற்கு காரணமான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் காங்கிரசார் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இலங்கை அரசுக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் போராட்டமானது நடைபெற்றது. மேலும் போராட்டத்தை தொடர்ந்து, மீனவர்கள் பேரணியாக சென்று எழுப்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இருக்க கூடிய இலங்கை தூதரகத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளனர். இலங்கை சிறையில் உள்ள 27 மீனவர்களை விடுவிப்பதோடு, கடந்த 9 1/2 ஆண்டுகளாக இலங்கை வசம் இருக்க கூடிய தமிழக மற்றும் புதுவை மீனவர்களின் அனைத்து படகுகளையும் விடுவிக்க கோரி போராட்டமானது நடத்தபட்டு வருகிறது.

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழ்நாடு, புதுவை மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: