ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு சோனியா காந்திக்கு அழைப்பு: காங். மூத்த தலைவர் தகவல்


புதுடெல்லி: ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பிதழ் வந்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கூறினார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22ம் தேதி புதியதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘குடமுழுக்கு விழாவிற்கு ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

அறக்கட்டளையின் சார்பில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்களா என்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்’ என்றார். இவ்விழாவில் பங்கேற்ப்பதற்காக முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், எச்.டி.தேவே கவுடா ஆகியோருக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு வருவதாக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறினார்.

The post ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு சோனியா காந்திக்கு அழைப்பு: காங். மூத்த தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: