திருச்சி: திருச்சி தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் 600 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு இறுதியாண்டு பயிலும் 2 மாணவர்கள், கடந்த 13ம்தேதி சக மாணவர் ஒருவருக்கு குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து குடிக்க வைத்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர், சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் நாகராஜிடம் புகார் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க, 3 பேராசிரியர்கள் அடங்கிய குழுவினருக்கு துணைவேந்தர் உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த குழுவினர், பாதிக்கப்பட்ட மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் மற்றும் 7 பேரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அறிக்கை நாளை (18ம்தேதி) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கிடையே குற்றம்சாட்டப்பட்ட 2 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்து துணைவேந்தர் நாகராஜ் உத்தரவிட்டார்.
The post குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து குடிக்க வைத்த சட்ட மாணவர்கள் 2 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.