சாமை, தயிர், பால், திராட்சை, முந்திரிப்பருப்பு, மாதுளம்பழ முத்துக்கள் ஆகியவை சேர்த்து தயிர்சாதம் செய்யலாம்.
கம்பரிசி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கம்புக் கொழுக்கட்டை தயாரிக்கலாம்.
கம்புமாவு, பச்சைப் பயறு மாவு, பேரீச்சம் பழம், கருப்பட்டி, பால் சேர்த்து கம்பு லட்டு தயாரிக்கலாம்.
சாமைஅரிசி, பயத்தம்பருப்பு, நெய், கல்கண்டு, திராட்சை, முந்திரி பருப்பு சேர்த்து சாமை கல்கண்டு பாத் தயாரிக்கலாம்.
வரகரிசி, பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், சூடான எண்ணெய், எள் சேர்த்து வரகு முறுக்கு தயாரிக்கலாம்.
வரகரிசி, பயத்தம்பருப்பு சேர்த்து வரகு பொங்கல் தயாரிக்கலாம்.
சோளமாவு, பயத்தம் பருப்பு, மிளகு சேர்த்து சோள உசிலி தயாரிக்கலாம்.
– எஸ். சிவப்பிரகாசம்
The post குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்! appeared first on Dinakaran.