×

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சிங்கப்பூர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மக்கள் செயல் கட்சி-யை அதன் 14வது தொடர்ச்சியான வெற்றிக்கு வழிநடத்தி சென்றுள்ள பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு எனது வாழ்த்துகள். தலைவராக சந்தித்த முதல் தேர்தலில் இத்தகைய பெருவெற்றியைச் சிங்கப்பூர் மக்களிடம் இருந்து அவர் பெற்றுள்ளார்.

தமிழ் மக்களுடன் தொடர்ந்து நல்லுறவை பேணி, தமிழ் மொழியையும் பண்பாட்டையும் உயர்த்தி பிடிக்கும் அவரது முயற்சிகள் அனைவரையும் அரவணைக்கும் சிங்கப்பூரின் தன்மையை வெளிப்படுத்துகிறது. சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

The post சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Singapore ,Prime Minister Lawrence Wong ,Chennai ,elections ,Lawrence Wong ,People's Action Party ,Dinakaran ,
× RELATED தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய...