யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சாந்தி நிகேதன்

புதுடெல்லி: சாந்தி நிகேதனை உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க யுனெஸ்கோவுக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் பிம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சாந்தி நிகேதனில் விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தை வங்க கவிஞர் ரவீந்திரநாத் நிறுவினார். கலாச்சார பெருமை மிக்க இந்த தலத்துக்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் சேர்க்க இந்தியா பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில், “இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சவுதி அரேபியாவின் ரியாவில் நடைபெறவுள்ள பாரம்பரிய குழு கூட்டத்தில் யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் சாந்தி நிகேதன் சேர்ப்பு குறித்த முறையான அறிவிப்பு வௌியாகும்” என ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

The post யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சாந்தி நிகேதன் appeared first on Dinakaran.

Related Stories: