சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ வெளியேற்றப்படும்: ஹேமந்த்சோரன் ஆவேசம்

ராஞ்சி: சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ முற்றிலுமாக துடைத்தெறியப்படும் என்று முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்டில் நில மோசடி வழக்கில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சோரனுக்கு நேற்று முன்தினம் அம்மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தொண்டர்களிடையே முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய ஹேமந்த் சோரன், ‘‘என்னை சிறையில் அடைப்பதற்கு சதி திட்டம் தீட்டியவர்களுக்கு எதிராக கிளர்ச்சி இருக்கும். ஜார்க்கண்ட் மக்கள் பாஜவை விட்டுவைக்க மாட்டார்கள். பாஜவின் இறுதி ஊர்வலத்திற்கான நேரம் வந்துவிட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்கண்டில் இருந்து பாஜ முழுவதுமாக வெளியேற்றப்படும்” என்றார்.

The post சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஜார்க்கண்டில் இருந்து பாஜ வெளியேற்றப்படும்: ஹேமந்த்சோரன் ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: