வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி தலைமையில் இன்று எஸ்சிஓ உச்சி மாநாடு: சீன, ரஷ்ய அதிபர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு (எஸ்சிஓ) வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று நடக்கிறது. இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) உறுப்பினர்களாக உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி, சமர்கண்ட் உச்சி மாநாட்டில், சுழற்சி அடிப்படையில் எஸ்சிஓ தலைமை பதவியை இந்தியா ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில்,பிரதமர் மோடி தலைமையில் எஸ்சிஓ உச்சி மாநாடு வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று நடக்க உள்ளது. இதில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். ரஷ்யாவில் சமீபத்தில் ஆயுத கிளர்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் புடின் பங்கேற்கும் முதல் சர்வதேச மாநாடு இது. இந்த மாநாட்டில், ஆப்கானிஸ்தான் நிலை, உக்ரைன் போர், எஸ்சிஓ உறுப்பு நாடுகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பிராந்திய பாதுகாப்பு, இணைப்பு, வர்த்தக மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

The post வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி தலைமையில் இன்று எஸ்சிஓ உச்சி மாநாடு: சீன, ரஷ்ய அதிபர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: