சமஸ்கிருதத்துக்கு ரூ.2,533 கோடி, தமிழுக்கு வெறும் ரூ.13 கோடி: ஒன்றிய அரசின் பாரபட்சம் ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்

டெல்லி: சமஸ்கிருத மொழியை மட்டும் மேம்படுத்த ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலமாகியுள்ளது. 2014-15 முதல் 2024-25 வரை சமஸ்கிருத மேம்பாட்டுக்கு ரூ.2,533 கோடியை (ஆண்டுக்கு ரூ.230 கோடி) ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. 2004ல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழைவிட 2005ல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழிக்கு ஒவ்வொரு ஆண்டும் | ரூ.230 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற 5 செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளுக்கு ஒதுக்கிய நிதியை விட சமஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி 17 மடங்கு அதிகமாகும். சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளது ஒன்றிய அரசு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு வெறும் ரூ.147.56 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது.

சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கிய நிதியில் வெறும் 5% மட்டுமே மற்ற 5 மொழிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

The post சமஸ்கிருதத்துக்கு ரூ.2,533 கோடி, தமிழுக்கு வெறும் ரூ.13 கோடி: ஒன்றிய அரசின் பாரபட்சம் ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: