
சென்னை: ஐபிஎல் தொடரில் பாதிக்கு மேற்பட்ட ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் அதிக ரன் குவித்ததற்காக சாய் சுதர்சன், ‘ஆரஞ்ச்’ தொப்பியையும், அதிக விக்கெட்களை அள்ளியதற்காக பிரசித் கிருஷ்ணா, ஊதா தொப்பியையும் வசப்படுத்தி உள்ளனர். இருவரும் குஜராத் அணிக்காக விளையாடுகின்றனர்.
அதிக அரைசதம்
குஜராத் வீரர் சாய் சுதர்சன், பெங்களூர் வீரர் விராட் கோஹ்லி ஆகியோர் தலா 8 ஆட்டங்களில் ஆடி தலா 5 அரை சதங்கள் விளாசி முதல் 2 இடங்களில் இருக்கின்றனர். நிகோலஸ் பூரன் (லக்னோ), அய்டன் மார்க்ரம் (லக்னோ), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான்), மிட்செல் மார்ஷ் (லக்னோ) ஆகியோர் தலா 4 அரைசதங்களை வெளுத்துள்ளனர். இவர்களை தவிர ஷ்ரேயாஸ் அய்யர் உட்பட 5 பேர் த லா 3 அரை சதங்களும், ரோகித் சர்மா உட்பட 5 வீரர்கள் தலா 2 அரை சதங்களும் அடித்துள்ளனர். தலா ஒரு அரை சதம் அடித்த வீரர்களின் எண்ணிக்கை தனி.
பந்து வீச்சில் சிக்கனம்
எதிரணிக்கு குறைவான ரன்னை விட்டு தந்த வீரர்கள் (ஒரு ஓவருக்கு சராசரியாக) பட்டியலில் கொல்கத்தா வீரர்கள் மொயீன் அலி (6.36), வருண் சக்கரவர்த்தி (6.48), டெல்லியின் குல்தீப்யாதவ் (6.50), மும்பையின் வில் ஜாக்ஸ் (6.67), லக்னோவின் திக்வேஷ் சிங்(7.28) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.
கைநழுவிய சதங்கள்
ஸ்ரேயாஸ் அய்யர் (97), ஜோஸ் பட்லர் (97), குயின்டன் டி காக் (97, கொல்கத்தா)), கே.எல்.ராகுல் (93, லக்னோ), சுப்மன் கில் (90, குஜராத்) ஆகியோர் தலா ஒரு முறை 90 ரன்னை தொட்டு நூலிழையில் சதத்தை தவற விட்டனர்.
The post பேட்டிங், பவுலிங்கில் சாதனை நாயகர்கள் appeared first on Dinakaran.
