×

யு-19 தெ.ஆ. உடன் முதல் ஓடிஐ இந்தியா அபார வெற்றி

பெனோனி: 19 வயதுக்கு உட்பட்ட இளம் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இளம் இந்தியா அணி டிஎல்எஸ் முறையில் 25 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இளம் இந்தியா கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்று ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகிறது. பெனோனி நகரில் நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி முதலில் களமிறங்கியது. துவக்க வீரர்கள் ஆரோன் ஜார்ஜ் 5, கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி 11 ரன்னில் ஆட்டமிழந்து மோசமான துவக்கம் தந்தனர். இருப்பினும் பின் வந்த வேதாந்த் திரிவேதி 21, அபிக்ஞான் குண்டு 21, ஹர்வன்ஷ் பங்காலியா 95, அம்பரீஷ் 65, கனிஷ்க் சவுகான் 32 ரன் விளாசி அணியின் ஸ்கோர் கணிசமாக உயர உதவினர். அதனால் 50 ஓவர் முடிவில் இளம் இந்தியா 301 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

பின்னர், 302 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான அட்னான் லகாடியன் 19 ரன்னிலும் பின்வந்த கேப்டன் முகம்மது புல்புலியா 5, ஜேசன் ரவுல்ஸ் 16, அர்மான் மனா 46 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அதேசமயம், மற்றொரு துவக்க வீரர் ஜோரிச் வான் ஸ்கால்க்விக் சிறப்பாக ஆடி 60 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 27.4 ஓவரில், தென் ஆப்ரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்திருந்தபோது இடி, மின்னலாய் இருந்ததால் போட்டி தடைபட்டது. அதன் பின்பும், நிலைமை சீராகாததால், டிஎல்எஸ் முறையில் இந்தியா 25 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Tags : U-19 ,South ,Africa ,India ,Benoni ,-19 ,South Africa ,
× RELATED ஆப்கோன் கால்பந்து; சூடானை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி