×

வங்கதேச போட்டிகளை இலங்கைக்கு மாற்றணும் பிசிபிக்கு ஆஸிப் நஸ்ருல் வலியுறுத்தல்

 

புதுடெல்லி: வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த கலவரங்களில் பல இந்துக்கள் கொல்லப்பட்டனர். அதையடுத்து எழுந்த எதிர்ப்புகளை அடுத்து, ஐபிஎல்லில் ஆடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இடம்பெற்றுள்ள வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை நீக்கும்படி பிசிசிஐ கூறியது. அதன்பேரில், முஸ்தபிசுர் நீக்கப்பட்டார். இந்நிலையில், ‘இந்தியாவில் வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு இருக்காது; எனவே, இந்தியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைக்காக வங்கதேசம் பங்கேற்கும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற, ஐசிசியிடம் வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பிசிபி), கோர வேண்டும்’ என அந்நாட்டு விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆஸிப் நஸ்ருல் வலியுறுத்தி உள்ளார்.

ஆனால், ‘உலகக் கோப்பை போட்டிகள் நடக்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், வங்கதேசம் ஆடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுவது இயலாத காரியம்; யாரோ ஒருவரின் விருப்பு, வெறுப்புக்காக போட்டிகளை மாற்ற முடியாது. இந்த விஷயத்தில் வங்கதேசத்துடன் விளையாடும் எதிரணிக்கு உள்ள சிரமங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Tags : Asif Nasrul ,PCB ,Bangladesh ,Sri Lanka ,New Delhi ,Hindus ,BCCI ,Mustafizur Rahman ,Kolkata Knight Riders ,KKR ,IPL ,Mustafizur… ,
× RELATED வங்கதேச போட்டிகளை இலங்கைக்கு மாற்ற முடிவு