×

நியூசிலாந்துடன் 3 ஓடிஐ: கில் தலைமையில் இந்திய அணி; ஷ்ரேயாஸ் துணை கேப்டன்; கோஹ்லி, ரோகித்துக்கும் இடம்

புதுடெல்லி: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் ஆடும் இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடவுள்ளது. ஒரு நாள் போட்டிகள், வரும் 11ம் தேதி துவங்கவுள்ளன. இந்நிலையில், நியூசிலாந்து அணியுடன் மோதும் இந்திய அணி பற்றிய அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று வெளியிட்டது. அதன்படி இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக, உடல் தகுதியை பொறுத்து, ஷ்ரேயாஸ் ஐயரும் செயல்படுவார்கள்.

தவிர, நட்சத்திர வீரர்கள் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா ஆகியோரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ், நியூசி அணிக்கு எதிராக ஆடவுள்ளார். அதேசமயம், முகம்மது ஷமிக்கு அணியில் இடமில்லை. தவிர, இஷான் கிஷணுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில், ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இஷான் கிஷண், நியூசிக்கு எதிரான டி20 தொடரிலும், அடுத்த மாதம் துவங்கவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும் ஆடும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

* இந்திய அணி வீரர்கள்
சுப்மன் கில் (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன் – உடல் தகுதியை பொறுத்து), ரோகித் சர்மா, விராட் கோஹ்லி, கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகம்மது சிராஜ், ஹர்சித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

Tags : New Zealand ,Gill ,Shreyas ,Kohli ,Rohit ,New Delhi ,Shubman Gill ,BCCI ,India ,
× RELATED ஆப்கோன் கால்பந்து; சூடானை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி