ராணிப்பேட்டையில் பெண்கள் சீர்வரிசையுடன் பாலாற்றங்கரையில் ஆடிபெருக்கு விழா

*பாலாற்று அன்னைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது

ராணிப்பேட்டை :ஆடிபெருக்கு விழா முன்னிட்டு பெண்கள் சீர்வரிசையுடன் ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் பாலாற்று அன்னைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் ஆடிபெருக்கு விழாவை முன்னிட்டு பாலாற்று அன்னைக்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற் றது. நிகழ்ச்சிக்கு சிவலிங்கம் தலைமை தாங்கினார். வெங்கடேசன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பாரதி முரளிதர சுவாமிகள் கலந்து கொண்டு பூஜை செய்தார். ஆடிபெருக்கு விழாவையொட்டி ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் உள்ள குமாரசாமி மடத்திலிருந்து பெண்கள் பாலாற்று அன்னைக்கு சீர்வரிசை எடுத்துக்கொண்டு பாலாற்றங்கரையில் பூர்வாங்க சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைதொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்டு வழிப்பட்ட கலசதீர்த்தம், வஸ்திரம், வளையல், கும்குமம், மஞ்சள், அரிசி போன்றவற்றை காவிரித்தாய்க்கு பூஜை செய்து நதியில் செலுத்தி தீபாராதனை செய்தனர்.நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி வேலூர் கோட்ட தலைவர் மோகன், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post ராணிப்பேட்டையில் பெண்கள் சீர்வரிசையுடன் பாலாற்றங்கரையில் ஆடிபெருக்கு விழா appeared first on Dinakaran.

Related Stories: