ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முழு ஆதரவு: செல்வப்பெருந்தகை

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ள போராட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் மீதான ஒன்றிய அரசு, இலங்கை அரசின் விரோத போக்கை கண்டித்து பிப்.27-ல் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும். பிப்.27-ல் காலை ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முழு ஆதரவு: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Related Stories: