பழ விதை தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

நெல்லை: மேலப்பாளையத்தில் ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கியதால் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். நெல்லை, மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெருவைச் சேர்ந்த நிஜாம் என்பவரது மகன் ரியாஸ் (5). இவன் நேற்று இரவு தனது தாத்தா, பாட்டி வாங்கிக் கொடுத்த ரம்புட்டான் பழத்தைச் சாப்பிட்டுள்ளான். பழத்தை விழுங்கிய சில நிமிடங்களிலேயே, அதன் விதை தொண்டையில் சிக்கிக்கொண்டதால் ரியாசுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிறுவனை உறவினர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே ரியாஸ் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பழ விதை தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: