இதையடுத்து ராமதாஸ் நடத்திய எந்த கூட்டத்திலும் செயல் தலைவர் அன்புமணி கலந்துகொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்து வந்தார். கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி இருவரையும் சமாதானப்படுத்த எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலே முடிந்தது. இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்காய் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது பாமகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், சென்னை சோழிங்கநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில் 3 நாட்களுக்கு அன்புமணி பாமக நிர்வாகிகளை சந்திக்கிறார். இதில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், கூட்டணி, மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை அன்புமணி வழங்குகிறார்.
The post ராமதாஸின் சரமாரி குற்றச்சாட்டுக்கு மத்தியில், இன்று கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார் அன்புமணி!! appeared first on Dinakaran.
