வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி: 6 பேர் கொண்ட குழு நியமனம்

டெல்லி: வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆக்சிஜன் தயாரிக்க 250 பேரை ஆலைக்குள் அனுமதிக்கலாம் எனவும் கூறியுள்ளது. மேற்பார்வை குழுவில் உள்ளூர் மக்களை நியமிக்க வேதாந்தா எதிர்ப்பு தெரிவித்தது.  ஆக்சிஜன் தயாரிப்பை மேற்பார்வையில் 6 பேர் குழுவை நியமிக்க உச்சநீதிமன்றம் யோசனை செய்துள்ளது. நீர் அமைப்பு, சூற்றுச்சூழல் அமைப்பு மூலம் 3 உறுப்பினர்களை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இரு உறுப்பினர்கரள நியமிக்கலாம் எனவும் கூறியுள்ளது. நாட்டின் ஆக்சிஜன் தேவைக்காக மட்டும் தான் ஆலை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

குழுவில் தூத்துக்குடி ஆட்சியர், எஸ்.பி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக செயல்படுவார்கள் எனவும், தூத்துக்குடி துணை ஆட்சியர், இரு அரசு அதிகாரிகள் குழுவில் இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. மேற்பார்வையிட 5 பேர் கொண்ட குழுவை தமிழகம் அமைக்கும் என கூறியுள்ளது. ஆக்சிஜன் தயாரிக்க எத்தனை பேரை அனுமதிக்கலாம் என குழு முடிவு செய்யும் என நீதிபதி கூறினார். பணியாளரை அனுமதிக்கும் முன் குழவிடம் திட்டம் பற்றி வேதாந்தா விளக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசிடம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகத்திற்கு முன்னூரிமை வழங்கப்படாது என மத்திய அரசு கூறியுள்ளது.

Related Stories: