மழைநீர் வடிகால் ஒப்பந்த நிறுவன ஊழியர் மீது தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது..!!

சென்னை: மழைநீர் வடிகால் ஒப்பந்த ஊழியரை தாக்கிய நாம் தமிழர் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொளத்தூர் திருமலை நகரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மேற்பார்வையாளர் தினேஷ்குமார் என்பவர் பார்வையிட்டார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் மார்ஷல் ராஜ்குமார், தனது வீட்டுக்கு எதிரே கார் நிறுத்தும் இடம் அருகே உள்ள பள்ளத்தை மண் இட்டு மூடுமாறு கூறி சரமாரியாக தாக்குதல் நடத்தினார்.

இதையடுத்து புகாரின் பேரில் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த மாதவரம் போலீசார் மார்ஷல் ராஜ்குமாரை கைது செய்துள்ளனர்.

The post மழைநீர் வடிகால் ஒப்பந்த நிறுவன ஊழியர் மீது தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: