காத்து வாக்குல 2 காதல்….. டிரைவர், எஸ்.எஸ்.ஐயுடன் பெண் ஏட்டு தகாத உறவு: அடிதடியால் இருவரும் சஸ்பெண்ட்

சமயபுரம்: காத்து வாக்குல 2 காதல் என்பது போல் ஆட்டோ டிரைவர், எஸ்.எஸ்.ஐயுடன் பெண் ஏட்டு தகாத உறவில் இருந்தால் அடிதடி ஏற்பட்டது. இதனால் எஸ்.எஸ்.ஐ, பெண் ஏட்டு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றிய ஒருவருக்கும், திருச்சி போக்குவரத்து பெண் ஏட்டுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில், திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் ஆட்டோ ஓட்டும் நம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயச்சந்திரனுக்கும் பெண் ஏட்டுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த எஸ்எஸ்ஐ, பெண் ஏட்டுவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் எஸ்எஸ்ஐயிடம் பெண் ஏட்டு பேச்சை நிறுத்தியுள்ளார். கடந்த 6ம் தேதி ஆட்டோவில் பெண் ஏட்டும், ஜெயச்சந்திரனும் வெளியூர் சென்றனர். தகவலறிந்த எஸ்எஸ்ஐ தனது நண்பர்கள் 4 பேருடன் டூவீலரில் சென்று திருச்சி மாவட்டம் சிறுகாம்பூரில் ஜெயச்சந்திரனை வழிமறித்தார். தொடர்ந்து, அவரை அடித்து உதைத்துள்ளனர். இதில் காயமடைந்த ஜெயச்சந்திரன் வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எஸ்எஸ்ஐ, பெண் ஏட்டு ஆகிய இருவரையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். காத்து வாக்குல 2 காதல் என்பது போல் பெண் ஏட்டுவின் தகாத உறவால் ஏற்பட்ட மோதலில் எஸ்.எஸ்.ஐயுடன் அவர் சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post காத்து வாக்குல 2 காதல்….. டிரைவர், எஸ்.எஸ்.ஐயுடன் பெண் ஏட்டு தகாத உறவு: அடிதடியால் இருவரும் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: