மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்!!

சென்னை: கனமழையால் பாதிப்புக்குள்ளான நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வீடுகளுக்கான மின் இணைப்பைப் பொறுத்தவரை கட்டணம் கணக்கீடு செய்யப்பட்ட 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும். அண்மையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நீர் தேங்கியதால் கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மின் நுகர்வோருக்கு கட்டணம் செலுத்துவதற்கு வாரியம் அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை கொட்டி வருகிறது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்ததோடு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தததால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களின் உடைமைகள் பாதிப்புக்குள்ளானதோடு, போக்குவரத்து துண்டிப்பு, மின்விநியோகம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இணையவழியிலும் கட்டணம் செலுத்த முடியாத சூழல் உள்ளது.இதனால் 5 மாவட்ட நுகர்வோருக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கி மின்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று, நாளைக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் அபராதமின்றி மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

The post மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்!! appeared first on Dinakaran.

Related Stories: