தேர்தல் வெற்றிக்கு பின் முதன்முறையாக ராகுல்காந்தி ரேபரேலி பயணம்: வீரமரணமடைந்த வீரர் குடும்பத்துக்கு ஆறுதல்

ரேபரேலி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியான ரேபரேலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல்காந்தி, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அபார வெற்ற பெற்ற ராகுல், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்தி, முதல்முறையாக இன்று ரேபரேலி தொகுதிக்கு சென்ற திட்டமிட்டார். அப்போது மேலும், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும், பொதுமக்களையும் ராகுல் காந்தி சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, கடந்தாண்டு சியாச்சின் தீ விபத்தில் மக்களை காப்பாற்றிய போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் அன்சுமான் சிங்கின் குடும்பத்தினரையும் சந்திக்கிறார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னதாக அன்சுமான் சிங்குக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கீர்த்தி சக்ரா விருது வழங்கிய நிலையில், ராகுல்காந்தி அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். முன்னதாக ராகுல் காந்தி சென்ற விமானம், ஃபர்சத்கஞ்ச் விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வானிலை காரணமாக லக்னோவில் தரையிறங்கியது. பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக ரேபரேலி சென்றார். நேற்று அசாம் மற்றும் மணிப்பூர் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இன்று தனது சொந்த தொகுதியான ரேபரேலியில் மக்களை சந்தித்து உரையாற்றுகிறார்.

 

The post தேர்தல் வெற்றிக்கு பின் முதன்முறையாக ராகுல்காந்தி ரேபரேலி பயணம்: வீரமரணமடைந்த வீரர் குடும்பத்துக்கு ஆறுதல் appeared first on Dinakaran.

Related Stories: