புதுச்சேரி மக்களுக்கு ரங்கசாமி அரசு துரோகம் செய்து வருகிறது: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி மக்களுக்கு ரங்கசாமி அரசு துரோகம் செய்து வருவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி; மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் ரூ.500 மானியம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இந்த அறிவிப்பு, தோல்வி பயத்தால் பிரதமர் மோடி சிலிண்டருக்கு ரூ.200, உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ரூ.400 விலை குறைப்பு என கூறியுள்ளார். இது பாஜவுக்கு வாக்கு வங்கியை சேர்க்க ஒன்றிய அரசு கடைபிடிக்கும் யுக்தி. தணிக்கை அறிக்கையில் ஒன்றிய அரசின் 7 திட்டங்களில் ரூ.7.50 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறியுள்ளது. முதல் அமைச்சர் ரங்கசாமி அறிவித்த சிலிண்டர் மானியம் உள்ளிட்ட 3 மகளிர் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.

மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு வழங்காததால் சென்டாக் கவுன்சிலிங் தொடங்காமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு அமலாகும் என ஆளுநர், முதல்வர் தெரிவித்திருந்தனர். புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு தொடர்பாக என பாஜக டெல்லியில் வலியுறுத்தவில்லை. இது தொடர்பாக விளக்கம் அளிப்பது யார்? எனவே புதுச்சேரி மக்களுக்கு, இந்த அரசு துரோகம் செய்து வருகிறது. கொள்ளை, ஊழல் தான் புதுச்சேரி அரசின் நோக்கம். இது போன்ற ஆட்சியாளர்களால், புதுச்சேரி குட்டி சுவராகி விட்டது. இவ்வாறு தெரிவித்தார்.

The post புதுச்சேரி மக்களுக்கு ரங்கசாமி அரசு துரோகம் செய்து வருகிறது: நாராயணசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: