புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ரங்கசாமி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பேரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். இதில் தற்போது பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டது. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இது அறிமுகமாகிறது.

இந்த திட்டத்தை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் பயனடையும் குழந்தையின் பெற்றோர் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் புதுச்சேரி யில் குடியிருந்திருக்க வேண்டும். 17.3.2023-க்கு பிறகு பிறந்த குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம். குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தில் டெபாசிட் செய்யப்படும். 21 ஆண்டுகள் கழித்து அந்த பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த திட்டத்தை புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அதில் 22 குழந்தைகளுக்கு தலா ரூ.50,000 வழங்கி முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

The post புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ரங்கசாமி..!! appeared first on Dinakaran.

Related Stories: