புதுச்சேரியில் பிரஞ்சு தேசிய தினம் கோலாகல கொண்டாட்டம்: பிரான்சில் தீப்பந்தம் ஏந்திப் புரட்சி செய்து வென்றதை நினைவுகூறும் நிகழ்ச்சி

புதுச்சேரி: பிரான்ஸில் தீ பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றதை நினைவு கூறும் பிரஞ்சு தேசிய தின விழா புதுச்சேரியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சிறைச்சாலையை பொதுமக்கள் புரட்சி மூலம் தகர்த்து மன்னர் ஆட்சியை ஒழித்து மக்கள் ஆட்சியை நிறுவினர். இந்த தினம் பிரஞ்சு தேசிய தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

தீப்பந்தம் ஏந்தி புரட்சி செய்து வென்றதை நினைவு கூறும் வகையில் புதுச்சேரி, காரைக்கால், மஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் வசிக்கும் பிரஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் பிரான்ஸ் நாட்டினர் புதுச்சேரியில் பிரமாண்ட மின்விளக்கு பேரணி நடத்தினர். புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள ஜுபிளெக்ஸ் சிலை முன்பு பிரஞ்சு வாழ் மக்கள் கைகளில் மின்விளக்குகளை ஏந்தியபடி பேண்ட் இசை முழங்க பிரான்ஸ் தேசிய கோடியை ஏந்தியபடி பேரணி சென்றனர். இந்த ஊர்வலம் பிரஞ்சு துணை தூரகத்தில் முடிவடைந்தது.

The post புதுச்சேரியில் பிரஞ்சு தேசிய தினம் கோலாகல கொண்டாட்டம்: பிரான்சில் தீப்பந்தம் ஏந்திப் புரட்சி செய்து வென்றதை நினைவுகூறும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: