பதவி உயர்வை மேலும் தாமதப்படுத்தினால் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டத்தினை முன்னெடுக்க நேரிடும்: அரசு ஊழியர்கள் எச்சரிக்கை

டெல்லி: பதவி உயர்வுகளை மேலும் தாமதப்படுத்தினால் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டத்தினை முன்னெடுக்க நேரிடும் என்று ஒன்றிய அரசு ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். பதவி உயர்வுகளை முறைப்படி வழங்குவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ள ஒன்றிய செயலக சேவை துறை ஊழியர்கள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை, பாதுகாப்புத்துறை அமைச்சகங்கள் அமைந்துள்ள ரசினாஹில்ஸ் பகுதியில் 100 ஊழியர்கள் திரண்டு பேரணி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏராளமான ஒன்றிய அரசு ஊழியர்கள் பதவி உயர்வு கிடைக்காமலேயே ஓய்வு பெறுவதால் ஓய்வூதிய பலன்களில் இழப்பு ஏற்படுவதாக அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்ப படாமல் இருப்பதால் பணிச்சுமை அதிகரித்திருப்பதாகவும் அவர்கள் கூறினர். காலிப்பணியிடங்களை கண்டறிய கடந்த 2022யில் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட ஆய்வு குழு தங்களது பரிந்துரைகளை அரசிடம் அளிக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். பதவி உயர்வு பணி நியமனம் தொடர்பாக விரைந்து முடிவெடுக்கவில்லை என்றால் ஒன்றிய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post பதவி உயர்வை மேலும் தாமதப்படுத்தினால் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டத்தினை முன்னெடுக்க நேரிடும்: அரசு ஊழியர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: