பொன்னானி-மாங்காவயல் சாலை பணிக்கு கொண்டு வந்த ஜல்லி கற்கள்; ரோட்டில் கொட்டியதால் பாதிப்பு

பந்தலூர்: பொன்னானி மாங்காவயல் சாலை சீரமைப்பு பணிக்கு கொண்டு வந்துள்ள ஜல்லி கற்கள், எம் சாண்ட் உள்ளிட்ட பொருட்களை அம்மங்காவு சாலையில் இடையூறாக கொட்டி வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பந்தலூர் அருகே பொன்னானி மாங்கா வயல் செல்லும் சாலை சீரமைப்பு பணிகள் தற்போது பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. பணிகளுக்கு கொண்டு வரப்படும் ஜல்லி கற்கள், எம் சாண்ட் உள்ளிட்ட பொருட்கள் பொன்னானி அம்மங்காவு செல்லும் சாலையில் உள்ள பாலம் அருகே கொட்டப்பட்டு வருகிறது.

இவை அம்மன்காவு செல்லும் சாலையின் பாதியளவு வரை கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மன்காவு பகுதிக்கு செல்லும் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. ஜல்லி கற்கள் மீது ஏறி செல்வதால் வாகன சக்கரங்கள் பஞ்சர் ஆகும் சூழலும் உள்ளது. அவசர தேவைகளுக்கு வாகனங்கள் செல்வதிலும் சிரமமாக உள்ளதால் ஜல்லி கற்கள் உள்ளிட்ட பொருட்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

The post பொன்னானி-மாங்காவயல் சாலை பணிக்கு கொண்டு வந்த ஜல்லி கற்கள்; ரோட்டில் கொட்டியதால் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: