மதுரை ஏர்போர்ட் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும்: விமான நிலைய இயக்குநர் தகவல்

அவனியாபுரம்: மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துகுமார் கூறியதாவது: இன்று முதல் மதுரை விமான நிலையம் 24 மணிநேரம் இயங்கும். இதற்கான தொடக்க நிகழ்ச்சி மாலை 4.30 மணியளவில் நடக்கிறது. இதில், இந்திய விமான ஆணையத்தின் தலைவர் சஞ்சீவ் குமார், எம்பிக்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் கலந்து கொள்கின்றனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 305 பேர், விமான நிறுவன ஊழியர்கள், விமான நிலைய ஊழியர்கள், சுங்க இலாகாவினர், குடியுரிமை அதிகாரிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் 29ம் தேதி முதல் குளிர்கால அட்டவணை தொடங்குவதால் அதிகளவிலான விமான சேவைக்கான வாய்ப்பு உள்ளது. மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைகள் அதிகரித்து அதிக பயணிகளை கையாள்வதில் 32 இடத்தில் உள்ள மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவை மூலம் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

 

The post மதுரை ஏர்போர்ட் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும்: விமான நிலைய இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: