பொன்குமார் இல்ல திருமணம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவரும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத் தலைவருமான பொன்குமார்-மைதிலி தம்பதியின் மகள் கே.திவ்யா, மாங்காடு கிருஷ்ணன்-கீதா தம்பதியின் மகன் ரஞ்சித்குமார் ஆகியோரின் திருமணம் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. திருமணத்தை திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடத்திவைத்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

திருமண விழாவில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.பொருளாளர் எஸ்.ஜெகதீசன், என்.சுந்தர்ராஜ், ஜெகன் முருகன், தலைமை நிலைய செயலாளர் ரஜினிராஜ், அமைப்பு செயலாளர் நாகராஜ், சமூக சத்திரியர் பேரவை மாநில இணை பொதுச்செயலாளர் எஸ்.எம்.குமார், தொகுதி தலைவர் லயன் சீனு, காங்கிரஸ் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஜெ.ரகுநாதன், விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம், கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு, சமூகநீதி சத்திரியர் பேரவை ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

நேற்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமணத்துக்கு வந்தவர்களை பொன்குமார், மைதிலி பொன்குமார், கே.வினோத்குமார், ரேவதி வினோத்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

The post பொன்குமார் இல்ல திருமணம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: