பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 ; அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: முதல்வர் நேற்று பொங்கல் திருநாளை தமிழ்நாடு மக்கள் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கத் தொகை ரூ.1000 சேர்த்து வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

அனைத்து அட்டைதாரர்கள் (2,19,51,748) மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு (19,365) ஆக மொத்தம் 2,19,71,113 குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கத் தொகை ரூ.1000 சேர்த்து வழங்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.2436,18,77,690 செலவினம் ஏற்படும்.

மேலும் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.238,92,72,741 மற்றும் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1828,05,98,062 ஆக மொத்தம் ரூ.2066,98,70,803 வழங்கப்பட்ட தொகையில் மீதித் தொகை ரூ.362,20,06,887 க்கான நிர்வாக அனுமதி வழங்கி நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது. இந்த செலவினம் 2023-24 வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் இருந்து மேற்கொள்ளப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

The post பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 ; அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: