இந்த ஆண்டு 100% மாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் பள்ளிக்கல்வித்துறையிடமிருந்து கடந்த 2 ஆண்டுகளாக உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரங்களை பெற்று அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாகவும், 10ம் வகுப்பிற்கு பிறகு இடைநின்ற மாணவர்களின் விவரங்களை சேகரித்தும் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையில் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கடைசிநாள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
The post அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.
