பா.ம.க. குழப்பத்துக்கு திமுக காரணமல்ல – ராமதாஸ்

சென்னை: பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு திமுகவே காரணம் என்று அன்புமணி கூறியது அப்பட்டமான பொய் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி மன்னிப்பு கேட்டுள்ளதால் குழப்பம் தீருமா? என்ற கேள்விக்கு, போகப் போகத் தெரியும் என ராமதாஸ் பாட்டு பாடி பதிலளித்தார். அன்புமணி கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்கவே பாமக எம்.எல்.ஏ.க்கள் மருத்துவமனையில் அனுமதியா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்; அந்த நேரத்தில் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன் என்று கூறினார்.

 

The post பா.ம.க. குழப்பத்துக்கு திமுக காரணமல்ல – ராமதாஸ் appeared first on Dinakaran.

Related Stories: