பாமக பிரச்னையின் பின்னணியில் பாஜக?.. நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி


நெல்லை: பாமகவில் நடந்து வரும் பிரச்னையின் பின்னணியில் பாஜக இருக்கிறதா என நெல்aலையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பரபரப்பு பேட்டி அளித்தார். நெல்லையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே நடந்து வரும் பிரச்னையில் பாஜக பின்னணியில் இருப்பதாக கூறுவது முற்றிலும் வேடிக்கையானது. பாமகவில் நடந்து வரும் பிரச்னையின் பின்னணியில் பாஜக இல்லை. முழுக்க முழுக்க அவர்களது உட்கட்சி விவகாரம். அது குறித்து கருத்து கூற, உட்கட்சி பிரச்னையில் தலையிட எதுவும் இல்லை. ஒரு மனிதனுக்கு தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய் மொழி மீதும் பற்று இருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பேச்சுக்களில் தலைவராக இருப்பவர்கள் கருத்துக்களை தவிர்க்க வேண்டும்.

கன்னடத்தை பூர்வீகமாக கொண்ட தலைவரால் எனக்கு பிரச்னை வந்தது எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார். இது தேவையான பேச்சா என தெரியவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்ற போது அங்கே இருப்பவர்கள் கன்னடம் வாழ்க என்று கூறச் சொன்னார்கள். அந்த நேரத்தில் உயிரே போனாலும் சொல்ல மாட்டேன் எனக் கூறி தமிழ் மொழியின் பெருமையை காத்தவர் ஜெயலலிதா. நடிகர் கமல்ஹாசன் தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.அதிமுக ராஜ்ய சபா எம்பி யார் என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.

The post பாமக பிரச்னையின் பின்னணியில் பாஜக?.. நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: