மக்கள் குறைதீர் கூட்டத்தில் 427 மனுக்கள் குவிந்தன

 

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 427 மனுக்களை கலெக்டர் உமாவிடம் பொதுமக்கள் வழங்கினர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.தொடர்ந்து, சமூக நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மூன்று சக்கர சைக்கிள், 1 மடக்கு சக்கர நாற்காலி என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ. 26,200 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் 427 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.

Related Stories: