இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இடையேயான போரை நிறுத்த உதவிய தனக்கு நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என கூறி ஆதங்கப்பட்டு இருக்கிறார் டிரம்ப். இது தொடர்பாக ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கூறியதாவது; காங்கோ ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில் இருநாட்டு தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாஷிங்டன் வருகிறார்கள். ஆப்பிரிக்காவுக்கும் உலகிற்கும் இது ஒரு சிறந்த நாள். இதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போரை நிறுத்தியதால் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. செர்பியா – கொசோவோ, எகிப்து – எத்தியோப்பியா நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தியதால் எனக்கு போர் நோபல் பரிசு கிடைக்காது. மத்திய கிழக்கு ஒப்பந்தங்களை மேற்கொண்ட எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. ரஷ்யா- உக்ரைன், இஸ்ரேல்-ஈரான் உள்பட நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. பல நாடுகள் இடையே பதற்றத்தை தணிக்க உதவிய எனக்கு 5 முறை நோபல் பரிசு வழங்கியிருக்க வேண்டும் என்றும், அதன் விளைவுகள் என்ன இருந்தாலும் என்னுடைய பணி குறித்து மக்களுக்கு தெரியும். அதுவே எனக்கு முக்கியம் என கூறியுள்ளார்.
The post நான் என்ன செய்தாலும் அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு கிடைக்காது: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதங்கம்!! appeared first on Dinakaran.
