அப்போது ஒரு வீட்டில் 254 வலி நிவாரணி மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஜீவா (25) என்பவரை கைது செய்தனர். இவர் கொடுத்த தகவலின்படி வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த பாலாஜி பாபு (26) என்பவரை கைது செய்தனர்.
பாலாஜி பாபு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆன்லைனில் வலிநிவாரணி மாத்திரைகளை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக 12 ஆயிரம் ரூபாய் செலுத்தி, பாட்னாவில் இருந்து மாத்திரைகளை கூரியர் மூலம் பெற்றுள்ளார். பின்னர், ஒரு மாத்திரை 300 ரூபாய் என விற்றுள்ளார். இதற்கு ஜீவாவும் துணையாக இருந்துள்ளார். இவர்கள் இருவர் மீதும் 2 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து கைது செய்யப்பட்ட பாலாஜி பாபு, ஜீவா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post பாட்னாவில் இருந்து வாங்கி வந்து போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது: 250 மாத்திரை பறிமுதல் appeared first on Dinakaran.
